"நானும் சாமி பாக்க வருவேன்" இருமுடி பைக்குள் குட்டித்தூக்கம்..கைவைத்த மறுநொடி...அரண்டு போன பக்தர்
கேரளா, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தரின் இருமுடி பைக்குள் பாம்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருமுடி கட்டி வந்த பக்தர் ஒருவர், 18ம் படி அருகில் உள்ள மரத்தடியில் ஓய்வெடுத்துள்ளார். பிறகு சாமி தரிசனத்திற்கு செல்கையில், இருமுடி பைக்குள் பாம்பு இருப்பதை சக பக்தர் ஒருவர் கண்டுபிடித்தார். இதனையடுத்து, பாம்பானது வனத்துறையினரால் பிடித்து செல்லப்பட்டது. மேலும், சன்னிதானத்தில் உள்ள மரங்களில் பாம்புகள் இருப்பதால், பக்தர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.