டெல்லியில் கார் ஷோரூமில், மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய, சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.மேற்கு டெல்லியின் திலக் நகர் பகுதியில் ஃபியூஷன் கார்ஸ் என்ற கார் ஷோரூமில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில், அடையாளம் தெரியாத இருவர் பைக்கில் வந்தனர். பின்னர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரி சுட்டனர். கடைக்கு வெளியேயும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதில் ஷோரூம் கண்ணாடி உடைந்ததில், 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஷோரூம் ஊழியர் ஒருவரிடம் அவர்கள் ஒரு கடிதத்தையும் கொடுத்தனர். இது மிரட்டி பணம் பறிக்கும் கடிதமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.