ஓடும் பள்ளி வேனிலிருந்து கீழே விழுந்த சிறுமிகள்.. நிற்காமல் சென்ற டிரைவரால் பேரதிர்ச்சி-பகீர் வீடியோ

Update: 2024-06-23 08:25 GMT

குஜராத் மாநிலம், வதோதரா நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி வாகனத்திலிருந்து மாணவியர் இருவர் தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது... இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது. அந்த வேனுக்குப் பின்னால் வேறு எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வேனின் பின்கதவு திடீரெனத் திறந்து, சிறுமியர் இருவரும் கீழே விழுந்துள்ளனர்... அவ்வழியே சென்றோர் உடனடியாக உதவிக்கு விரைந்த நிலையில் வேன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்... பெற்றோர் அளித்த புகார்களை அடுத்து, ஓட்டுனர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்