அரசு பள்ளி மாணவர்கள் மோதல்...முறிந்த ஆசிரியரின் கை - பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
கேரளா மாநிலம் பாலக்காடு அருகே அரசு பள்ளி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், ஆசிரியர் ஒருவர் கீழே விழுந்து கை எலும்பை முறித்துக் கொண்டார். பாலக்காடு அருகேயுள்ள குமரநெல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்,
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. காலை பள்ளி தொடங்கிய உடனே, இரு தரப்பு மாணவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது, தகராறை தடுக்க சென்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் கீழே விழுந்ததில், ஆசிரியருக்கு கை எலும்பு முறிந்து போனது. இது தொடர்பாக பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கூட்டிய பள்ளி நிர்வாகம், 14 மாணவர்களை இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.