புதுச்சேரியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.புதுச்சேரி அரசு, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் இணைந்து 3 நாட்கள் நடத்தும், கலை விழா புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடலில் தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் முரசு கொட்டி விழாவினைத் தொடங்கி வைத்தனர்.