எமலோகத்துக்கே வழிகாட்டிய கூகுள் மேப் -ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய Boys -ஒரே மாதத்தில் அடுத்த சமப்வம்

Update: 2024-06-13 04:24 GMT

கூகுள் மேப்-ஐ நம்பி சென்ற போது ஓடைக்குள் கார் புகுந்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானாவைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்னோவா காரில் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆலப்புழாவில் இருந்து மூணாறுக்கு சென்றுக்கொண்டிருந்த போது, சேர்ந்தலா - தண்ணீர்முக்கம் சாலையில் கூகுள் மேப்பில் காட்டியபடி காரை திருப்பியுள்ளனர். ஆனால் அங்கு சரியான பாதை இல்லாததால் கார் ஓடையில் இறங்கியுள்ளது. பின்னர் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரை திறந்து உள்ளே இருந்தவர்களை மீட்டனர். தொடர்ந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் மண் அள்ளும் இயந்திரம் மூலம் கார் மீட்கப்பட்டது. கடந்த மாதம் கூகுள்மேப்பை பயன்படுத்தி சென்றவர்களின் கார் ஆலப்புழாவில் கால்வாய்க்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்