டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் ஜெக்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அடுத்தடுத்து சம்மன் அனுப்பியது. ஆனால் 10 நாட்கள் தியானம் செய்ய போவதால் சம்மனை திரும்ப பெற வேண்டும் என கெஜ்ரிவால் கூறியிருந்தார். இந்த சூழலில், பிப்ரவரி 2ஆம் தேதி ஆஜராகுமாறு ஐந்தாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில், இந்த முறையும் அவர் ஆஜராகவில்லை. இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு பிப்ரவரி 7-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.