2 மாணவிகள் பரிதாப பலி..நள்ளிரவில் திடீரென திரண்ட மாணவர்கள் - பெரும் பரபரப்பு... பதற்றம்

Update: 2024-07-28 02:33 GMT

2 மாணவிகள் பரிதாப பலி..நள்ளிரவில் திடீரென திரண்ட மாணவர்கள் - பெரும் பரபரப்பு... பதற்றம்

டெல்லியில் பெய்த கனமழை காரணமாக பழைய

ராஜேந்திர நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி

மையத்தின் அடித்தளம் தண்ணீரில் மூழ்கியது.

இதனால் பயிற்சி மையத்தில் இருந்த பல

மாணவ- மாணவிகள் வெளியே வர

முடியாமல் சிக்கி கொண்டனர். போலீசார் , தீயணைப்புத்துறையினர் மற்றும் தேசிய

பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு

விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

தீயணைபு வீரர்கள் தண்ணீரை உறிஞ்சி

வெளியேற்றி 2 மாணவிகளின் உடல்களை

மீட்டனர். அவை உடனடியாக பிரேத

பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு

அனுப்பி வைக்கப்பட்டது. தண்ணீரில் சிக்கி

கொண்ட மேலும் ஒரு மாணவரின் உடல்

பின்னர் மீட்கப்பட்டது. அடித்தளத்தில் தண்ணீர்

உள்ளே வரும் போது பயிற்சி மையத்தினுள்

30க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் இருந்ததாகவும்

பலர் உடனடியாக வெளியேறி விட்டதாகவும்

அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும்

நிலையில் ஏராளமான மாணவர்கள் அங்கு

நள்ளிரவில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்