ஹாங்கில் இருந்து மதுபான பெட்டிக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 32 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டெல்லி விமான நிலையம் வழியாக ஐபோன்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஹாங்காங்கில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். மதுபான பெட்டிக்குள் 32 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன்களை 2 பேர் மறைத்து கொண்டு வந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்தனர்.