டெல்லியில், ஒரு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மூன்று
மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இடைக்கால
விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் செல்ல
முடியாததால் அடித்தளத்தில் நீர் புகுந்துள்ளதாக இதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் செயல்பட்டு
வரும் பயிற்சி மையங்கள் மீது கடந்த மூன்று நாட்களாக
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜேந்திர நகர்
சம்பவத்தைத் தொடர்ந்து 30 பயிற்சி மையங்களின்
அடித்தளங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 200
நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.