பிரதமர் மோடியை நேரில் சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன்

Update: 2024-08-27 14:37 GMT

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த கேரள

முதல்வர் பினராயி விஜயன், வயநாட்டின் மறுசீரமைப்பு குறித்து

அவரிடம் விவாதித்தார். இது குறித்து விரிவான அறிக்கையை

கேரள அரசு சமர்ப்பித்துள்ளது. நிவாரணம் மற்றும் மீள்கட்டமைப்பிற்கு முதற்கட்டமாக 900 கோடி ரூபாயை விடுவிக்க வேண்டும் என கேரளா அரசு தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. வயநாட்டில் ஏற்பட்ட நிலசரியில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்