தலைநகரில் குவியும் துணை ராணுவம்.. உச்சகட்ட உஷார்நிலை | Delhi | Modi Thanthitv

Update: 2024-06-09 02:53 GMT

இது குறித்து டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா வெளியிட்டுள்ள அறிக்கையில், டிரோன்கள், பாரா கிளைடர்கள், பாரா மோட்டர்கள், நைட்ரஜன் பலூன்கள் ஆகிவற்றைக் கொண்டு பொது மக்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் ஆபத்தை விளைவிக்க சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் திட்டமிடுக்கூடும் என தெரிவித்துள்ளார். எனவே, இன்றும், நாளையும் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளில்லா விமானங்கள், டிரோன்கள். பாரா கிளைடர்கள், பாரா மோட்டர்கள், நைட்ரஜன் பலூன்கள் பறக்கவிடவும் தடை விதிக்கப்படுவதாகவும், தடையை மீறுவோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி மூலம் 24 மணிநேரமும் போக்குவரத்து, ஆள் நடமாட்டம் ஆகியவற்றை கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், முக்கிய இடங்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, குடியரசுத் தலைவர் மாளிகை பாதுகாப்பில் துணை ராணுவ படைகளின் 5 கம்பெனிகள், தேசிய பாதுகாப்பு படை , டரோன்கள், மோப்ப நாய்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்