"கெஜ்ரிவால் செல்போனில் உள்ள ரகசியம்..? ED முட்டி மோதும் காரணம் இது தான்.." - டெல்லி அமைச்சர் பகீர்

Update: 2024-03-29 16:25 GMT

இந்தியா கூட்டணியின் மக்களவை தேர்தல் திட்டங்களை, அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்போன் மூலம் பெற பாஜக முயற்சிப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்போனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை கூறியதாக தெரிவித்தார். ஆனால், செல்போன் பாஸ்வேர்டு தரவில்லை எனக்கூறி காவலை நீட்டிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்த‌தாக கூறினார். அமலாக்கத்துறையால் பாஸ்வேர்டு கேட்கப்படவில்லை என்றும், செல்போன் உரையாடல்கள் மூலம் தேர்தல் வியூகங்களை அறிந்துகொள்ள பாஜக முயல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்