மீண்டும் ICU-வில் டெல்லி.. இதற்கு என்ன தான் தீர்வு?.. தலையை பிய்த்து கொள்ளும் அரசு
இதுகுறித்து மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகள்படி, டெல்லி அசோக் விஹாரில் 405, ஜஹாங்கிர்புரியில் 428, மேஜர் தியான் சந்த் நேஷனல் ஸ்டேடியத்தில் 404, துவாரகா செக்டார் 8-ல் 403 ஆக காற்று தரக்குறியீடு பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் காற்றின் தரம் சற்று மேம்பட்டதால் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கிய நிலையில், மீண்டும் காற்று மாசுபாடு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, காற்று மாசை குறைக்க கூடுதல் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக, டெல்லி மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.