டெல்லியில் காற்று மற்றும் நீர் மாசுபாடு அதிகரிப்பதற்கு பாஜகவின் இழிவான அரசியலே உண்மையான காரணம் என்று டெல்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி முதல்வர் அதிஷி, முன்னாள் அமைச்சர் சத்யேந்திரன் ஜெயினுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்லியில் மாசு அதிகரித்து வருவதுடன் யமுனையிலும் மாசு அதிகரித்து வருகிறது என்று கூறினார்.
டெல்லியின் காற்று, நீர் மாசுபாடு அதிகரிப்பதற்கு பாஜகவின் இழிவான அரசியலே உண்மையான காரணம் என்றும் அவர் கூறினார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆட்சி அமைந்த பிறகு, பயிர் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் பாதியாகக் குறைந்துள்ளது என்றும், அதே சமயம், பாஜக ஆளும் ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார். டெல்லியில் ஒரு செங்கல் சூளை கூட இல்லை என்றும், அதேசமயம் ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களின் எல்லையில் 3 ஆயிரத்து 800 செங்கல் சூளைகள் உள்ளன என்றும் அவர் கூறினார். செங்கல் சூளைகளால் ஏற்படும் மாசுபாட்டை தடுக்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதிஷி குற்றம் சாட்டி உள்ளார்.