டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்தில் முதலாவது முனையத்தில் உள்ள மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேற்கூரை இடிந்து விழுந்ததில் விமான நிலையத்தில் நின்றிருந்த சில கார்களும் சேதமடைந்தன. தொடர்ந்து அப்பகுதியை சீரமைக்கும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.