இரண்டு நாள் பயணமாக கர்நாடகாவிற்கு வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். நேற்று உ த்தர கன்னடா மாவட்டத்தின் கார்வாருக்கு வந்த மத்திய அமைச்சரை கடற்படை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ராஜ்நாத் சிங், வீரர்களுடன் கலந்துரையாடினார். இன்று காலை கடற்படை வீரர்களுடன் இணைந்து யோகாசனத்திலும் ஈடுபட்டார்.