உஜ்வாலா திட்டத்தின் கீழ் எல்பிஜி சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு, சிலிண்டர் ஒன்றுக்கு 300 ரூபாய் என ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சிலிண்டர் மானியம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 10.27 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் வரவு வைக்கப்படும் என்றும், இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 ஆயிரம் கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியம் போக உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சிலிண்டர் விலை 603 ரூபாயாக இருப்பது குறிப்பிடத்தக்கது..