பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி - பள்ளி வாகனத்தில் சென்று பிடித்த போலீசார்
மும்பையை அடுத்த தானே நகரில் 40-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி, அம்பிவலி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் வாகனத்தில் சென்றால் குற்றவாளி தப்பித்துவிட வாய்ப்பிருப்பதாகவும், அந்த பகுதியில் பொதுமக்கள் பலர் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு ரகசியமாக பள்ளி வேனில் சென்ற போலீசார், குற்றவாளியை சுற்றி வளைத்துப் பிடித்து, வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது, அங்கு வந்த குற்றவாளியின் ஆதரவாளர்கள், போலீசார் மீது கற்களை வீச தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் இருந்து போலீசார் குற்றவாளியுடன் மும்பைக்கு தப்பித்து வந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி தற்போது வெளியாகி உள்ளது.