மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஊழல் முறைகேடு..இந்தியா கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவு
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த, நீதிமன்றத்தை நாட இருப்பதாக, இந்தியா கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளனர். அந்த கூட்டணியின்
ஆலோசனைக்கூட்டம் மார்க்கிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவகத்தில் நடைபெற்றது. இதில்,
திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர்கள்,
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற ஊழல் முறைகேடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முதலமைச்சரையும் விசாரிக்க வலியுறுத்தப்படும் என்று கூறினர்.