"காங். கூட்டணி தூக்கத்தை தொலைத்து விட்டது" - பிரதமர் மோடி விமர்சனம்

Update: 2024-03-12 02:57 GMT

மத்திய பாஜக அரசின் ஆட்சியில் நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்களை பார்த்து காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் தூக்கத்தை தொலைத்து விட்டன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

vovt

ஹரியானா மாநிலம், குருகிராமில், சுமார் 4 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, துவாரகா விரைவுச் சாலையின் ஹரியானா பகுதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் 99 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை திறந்து வைத்த அவர், 905 கோடி ரூபாய் மதிப்பில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கும் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, நாட்டில் மிக வேகமாக நடைபெற்று வரும் உட்கட்டமைப்புத் திட்டங்கள், மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்கும் என்று குறிப்பிட்டார். நாட்டில் நடைபெற்று வரும் லட்சக்கணக்கான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பார்த்து காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தூக்கத்தை தொலைத்து விட்டன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்