காதலன் வீட்டில் காதலி மரணம்.. அப்பாவை குலைநடுங்கவிட்ட 24 போட்டோஸ்

Update: 2024-08-01 09:41 GMT

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவரது மகள் ஸ்ரீஷா. பட்டப்படிப்பு முடித்த ஸ்ரீஷா தனியார் மொபைல் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்கள் மூலமாக ஸ்ரீஷாவிற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் காதலித்து வந்ததாகவும், கடந்த 27-ந்தேதி மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துவிட்டு வருவதாக ஸ்ரீஷா பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று ராமாபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மணிகண்டன் வசித்து வரும் வீட்டில் ஸ்ரீஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் ஸ்ரீஷாவின் பெற்றோருக்கும் அவருடைய நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஸ்ரீசாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழலில் அவருடை சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்