சந்திரயான் 3..வெளியான முக்கிய தகவல்...நிலவில் இருக்கும் கனிமம், மண், கல்...தீவிரமாகும் ஆய்வு

Update: 2023-08-28 11:56 GMT

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் அனுப்பிய படங்களை வைத்து நிலவின் கனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்...

சேலம் அரசு கலைகல்லூரி புவி அமைப்பியல் துறை மற்றும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான சூரிய குடும்பம் மற்றும் நிலவு தொடர்பான 2 நாள் அறிவியல் கருத்தரங்கம் இன்று துவங்கியது. ஐதராபாத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமார் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் செயல்பாடுகள் மற்றும் கோள்களில் உள்ள தட்ப வெட்ப நிலை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஞ்ஞானி செந்தில்குமார், தற்போது அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் அனுப்பிய டேட்டாக்கள், புகைப்படங்களை வைத்து நிலவில் இருக்கும் கனிமம், மண், கல் உள்ளிட்டவை குறித்து விரைவில் ஆராய்ச்சி செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்