சந்திரசேகர ராவ் உடல்நிலை.. - மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Update: 2023-12-08 17:13 GMT

இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் குணமடைய 6 முதல் 8 வாரங்கள் ஆகும் என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரசேகர ராவ் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கையில், பாத்ரூமில் வழுக்கி விழுந்து, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டதாகவும், ஸ்கேன் செய்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சந்திரசேகர ராவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருப்பதாகவும், அவர் குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும் என்றும், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

--

Tags:    

மேலும் செய்திகள்