மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனைக்கு அனுமதித்த மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது...
மத்திய அரசின் உத்தரவுக்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினர்...
நீதிபதி பி.வி. நாகரத்னா கூறிய தீர்ப்பில், மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனைக்கான அனுமதியானது அவசர கதியில் அளிக்கப்பட்டுள்ளது என்றும்,
இந்த உத்தரவால் சுற்றுச்சூழல், பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும்,
வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளளின் அடிப்படையில் களப் பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது...
ஆனால், நீதிபதி சஞ்சய் கரோல் தனது தீர்ப்பில், மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனைக்கான அனுமதி வளர்ச்சி நோக்கிலானது என்றும்,
இந்தப் பரிசோதனையை கடுமையான கட்டுப்பாடுகளுடன் கண்கணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்...
இரு நீதிபதிகளும் தீர்ப்பில், இதற்கான கொள்கையை உரியவர்களுடன் ஆலோசித்து 4 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்றும்
இந்த விவகாரம் தொடர்பான மனுக்களை கூடுதல் அமர்வு விசாரிக்கும் வகையில் தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்..