கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவுபெற்றது. புதுப்பள்ளி எம்எல்ஏவும், முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி, கடந்த ஜூலை மாதம் காலமானார். இதனால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 7 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. நாளை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிந்தது. 53 ஆண்டுகளாக உம்மன் சாண்டி எம்எல்ஏவாக இருந்த தொகுதி என்பதால், தொகுதியை காங்கிரஸ் தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.