#BREAKING | ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு

Update: 2022-10-12 11:53 GMT

#BREAKING | ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்,

விளக்கமாக பேசினார். அப்போது அவர், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம், தீபாவளி போனசாக வழங்க வழங்க மத்திய

அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார். இதன் மூலம், 11 லட்சத்து 27 ஆயிரம் ஊழியர்கள் பயன் அடைவார்கள் என கூறியுள்ளார்.

இதன் மூலம் ஆயிரத்து 832 கோடி ரூபாய் போனசாக வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். மேலும்

எண்ணெய் நிறுவனங்களுக்கு 22 ஆயிரம் கோடி ஒரே தவணையாக மானியமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கூறினார்.

இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதிச்சுமை பெருமளவு குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்