பிரதமர் மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு | PM Modi | BJP | Pinarayi Vijayan

Update: 2024-04-23 04:58 GMT

முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் பேசியது முற்றிலும் தேச விரோதமானது என குறிப்பிட்டுள்ள அவர், கற்பனைக் கதைகளைப் புனைந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை பிரதமர் உருவாக்குவதாக தெரிவித்துள்ளார். முஸ்லீம்களை ஊடுருவல்கார‌ர்கள் என்று பிரதமர் எப்படி சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயல் என்று குற்றம் சாட்டியுள்ள பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்