ஆந்திராவில், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ரேணிகுண்டாவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்தவர்களிடம் ஆந்திர போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்த கோவிந்த், சுப்பிரமணியன் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த அப்துல் கான் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மீது பல்வேறு பைக் திருட்டு வழக்குகள் பதியப்பட்டு இருந்ததும் அம்பலமானது. தொடர்ந்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 41 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.