பெங்களூரு மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பெங்களூரு மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்தின் கீழ் இரண்டு புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்...
ஜேபி நகர் முதல் கெம்பாபுரா வரையிலான முதல் வழித்தடத்திற்கும் ஹோசஹல்லி - கடபாகரே இடையிலான இரண்டாம் வழித்தடத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த திட்டத்திற்கான மொத்த செலவு15 ஆயிரத்து 611 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் பூனே மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது...