கொட்டும் மழையிலும் ரோட்டில் பற்றி எரிந்த பேருந்துகள் - உள்ளே இருந்த பயணிகள் நிலை?
பெங்களூருவில் நேற்று இரவு கன மழையின் ஊடாக ஹெப்பால் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகராட்சி மின்சார பேருந்தில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அனைவரும் அதில இருந்து இறங்கினர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதே போல ஷிமாகா மாவட்டத்தில் கர்நாடக அரசு பேருந்து இன்று சென்று கொண்டிருந்த போதே எஞ்சின் பகுதியில் இருந்து தீப்பற்றி எரிய தொடங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.