புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் இருசக்கர வாகனம் கடந்த 19-ம் தேதி மாயமானது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 2 இளைஞர்கள், இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார், வேலன், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான 3 பேரும் புதுச்சேரி லாஸ்பேட்டை, பெரிய கடை, உருளையான்பேட்டை, முதலியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும், நெல்லித்தோப்பில் உள்ள பேக்கரி ஒன்றில் பகலில் பணியாற்றிவிட்டு, இரவு நேரங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் உறுதியானது.