மகளை கொலை செய்த‌தாக கைது -விசாரணைக்குப்பின் சிறை செல்லும் போது - ரயிலில் இறுதி முடிவை எடுத்த தந்தை

Update: 2023-12-16 04:01 GMT

கேரளாவில் மகளை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட தந்தை, நீதிமன்ற விசாரணைக்கு பின்பு சிறைக்கு செல்லும்போது ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொல்லம் மாவட்டம் மாவேலிக்கரையை சேர்ந்த ஸ்ரீமகேஷ் என்பவர், ஜூன் 7ஆம் தேதி தனது 6 வயது மகள் நட்சத்திராவை வெட்டி கொலை செய்த‌தாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 497 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்பட்ட போது, ஸ்ரீமகேஷ் ஆஜர்படுத்தப்ப்ட்டார். விசாரணைக்குப்பின் மீண்டும் சிறையில் அடைக்க ரயிலில் அழைத்துச் சென்ற போது, கழிவறைக்கு செல்வதாக காவலர்களிடம் கூறிவிட்டு சென்ற ஸ்ரீமகேஷ், கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜூன் 8ஆம் தேதி, கத்தியால் தனது கழுத்து மற்றும் கை நரம்புகளை துண்டித்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்