குண்டூரில் பெண் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் ஆந்திராவை உலுக்கியது. இறந்தவர் தெனாலி நகரின் யெடாலிங்கய்யா காலனியை சேர்ந்த நாகூர்பி என்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில் நாகூர்பியை ஏற்றிவந்த ஆட்டோ ஓட்டுநரை சிக்கவும், ரஜினி, அவரது தாய் ரமணம்மா, வெங்கடேஸ்வரி ஆகிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கூடுதல் விசாரணையில் அவர்கள் சீரியல் கில்லர்கள் என்பது தெரியவந்ததுள்ளது. வசதியானவர்களிடம் நட்பாக பழகி, தனியாக அழைத்து சென்று சைனைடு கலந்த பானத்தை கொடுத்துவிட்டு, பணம், நகையை சுருட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இப்படி ஏற்கனவே 3 கொலைகளை அரங்கேற்றியிருக்கிறார்கள் எனவும் 2 கொலைகளுக்கு திட்டம் போட்டியிருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. முக்கிய குற்றவாளியான ரஜினி கம்போடியாவில் சைபர் குற்றத்தில் ஈடுபட்டவர் எனவும் 2022-ல் சொத்து தகராறில் மாமியார் நாகம்மாவை கொன்றவர் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்களுக்கு சயனைடு சப்ளை செய்தவரையும் கைது செய்து விசாரிக்கும் போலீசார், முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.