18 மாத ஆண் குழந்தை புதிய நோய்... மருந்தின் விலை ரூ.17.5 கோடி... நேரில் வந்த டெல்லி முதலமைச்சர்
கனவ் என்ற 18 மாத ஆண் குழந்தை, தசைகளைக் கட்டுப்படுத்தி நரம்பு செல்களை பாதிக்கும் Spinal Mascular Atrophy எனப்படும் அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளான். ஆய்வுகளுக்கு பின் அமெரிக்காவில் 17 கோடியே 50 லட்சம் மதிப்பில் கிடைக்கும் மருந்தால் இந்த நோயை குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டது. குழந்தையின் பெற்றோர் ஆம் ஆத்மி எம்பி சஞ்சிவ் அரோராவை சந்தித்து கிரவுட் ஃபண்டிங் முறையில் 10. 5 கோடி ரூபாய் நிதி திரட்டினர். அமெரிக்க நிறுவனமும் 10.5 கோடிக்கு மருந்தை தர முன்வந்ததையடுத்து, மருந்து வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு செலுத்தப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் சூழலில், குழந்தையை நேரில் பார்வையிட்டு கெஜ்ரிவால் நலம் விசாரித்தார். மேலும், குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.