சொந்த கட்சி நிர்வாகியையே நாசம் செய்த MLA ஆதிமூலம்..! பற்றியெரியும் அக்கட தேசம்

Update: 2024-09-06 11:51 GMT

அரசியல் ரீதியான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. ஆதிமூலம் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக, அக்கட்சியின் பெண் நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர். கட்சியில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கு முன் தெலுங்குதேசம் கட்சியில் சேர்ந்த சத்தியவேடு தொகுதி எம்.எல்.ஏ. ஆதிமூலத்திற்கு, அதே தொகுதியில் போட்டியிட சந்திரபாபு நாயுடு வாய்ப்பளித்தார்.


இதற்கு கட்சியின் மகளிரணி தலைவி கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


எனினும் தேர்தலில் ஆதிமூலம் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.


இந்நிலையில், ஆசைக்கு இணங்காவிட்டால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.


சட்டமன்ற உறுப்பினருடன் திருப்பதியில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் தனியாக இருந்தபோது ரகசிய கேமராவை வைத்து அந்த காட்சிகளை பதிவு செய்துள்ளார்.


ரகசிய வீடியோ, செல்போன் கால் டேட்டா ஆகிய ஆதாரங்களுடன், எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், கட்சியிலிருந்து ஆதிமூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்