இந்தியாவிற்கு புதிய தலைவலி... மியான்மர் ராணுவம் அதிரடி தாக்குதல்- பரபரப்பில் மிசோரம்
- இந்தியா-மியான்மர் எல்லையில் உள்ள எல்லைப் பகுதிகளில் மியான்மர் ராணுவம், அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, மியான்மரில் இருந்து இடம்பெயர்ந்த மியான்மர் நாட்டவர்கள், மிசோரம் மாநிலம் சம்பாய் பகுதியில் தஞ்சம் அடைந்தனர்.
- அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக, இளம் மிசோ சங்கத்தின் நிதிச் செயலாளர் பியாக்டின்சங்கா தெரிவித்தார்.
- சுமார் 6 ஆயிரம் மியான்மர் நாட்டவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், தொண்டு நிறுவனம் சார்பில் உணவு, ஆடைகள் போன்றவை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
- இங்கு அவர்கள் நிம்மதியாக வாழ்வதாகவும், அவர்கள் மீது தங்களுக்கு அக்கறை உள்ளதாகவும் பியாக்டின்சங்கா தெரிவித்தார்.