`இவளும் டைவர்ஸ் கேட்ருவாளோ?' - பயத்தில் கணவன் செய்த காரியம்.. 12 ஆண்டாக 3ம் மனைவிக்கு நடந்த கொடுமை

Update: 2024-02-02 02:56 GMT

மைரூரு மாவட்டம் ஹரிகே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனாலயா. கூலி தொழிலாளியான இவர், ஏற்கெனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற நிலையில், ஷீலா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த சூழலில், 3வது மனைவியும் எங்கே பிரிந்து சென்று விடுவாரோ? என்ற பயத்தில் இருந்த சுனாலயா, ஷீலாவை 12 ஆண்டுகளாக வீட்டு சிறையில் வைத்துள்ளார். கதவுகள் 3 பூட்டுகள் மூலம் பூட்டப்பட்டு, ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்ட சூழலில், கழிவறை கூட இல்லாமல் அவதி அடைந்த அந்த பெண், வாளியில் இயற்கை உபாதைகளை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுனாலயாவின் முந்தைய மனைவிகள் அளித்த புகாரின்பேரில் கொடுமையை அனுபவித்து வந்த ஷீலாவை கதவை உடைத்து போலீசார் மீட்டனர். தொடர்ந்து கணவர் சுனாலயாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்