உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில், சந்தேகத்திற்கிடமாக வகையில் நடமாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படையினர் நடத்திய சோதனையில், சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.