அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிய தடை!

ஆந்திராவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்கில் பணியாற்ற தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-08 11:11 GMT
ஆந்திராவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் கிளினிக்கில் பணியாற்ற தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார விடுதிகளில் பணிபுரிந்து வருவதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று புகார்கள் வந்தன.

இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியக் கூடாது என்றும், மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்