காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து 45 நிமிடங்கள் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்..சென்னை மெட்ரோ ரெயில், மீனவர்கள் விவகாரம் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்ததாக பேட்டி..
- காஞ்சிபுரத்தில், இன்று திமுக பவளவிழா நடைபெறும் நிலையில் பிரமாண்ட ஏற்பாடு... கூட்டணி கட்சித் தலைவர்கள் படங்களுடன் பவளவிழா நுழைவு வாயில் தயார்... முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்....
- சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கினார் செந்தில்பாலாஜி... என் உயிர் உங்கள் காலடியில் என்று உருக்கம்...
- தலைவர் மகனை கட்சியினர் ஏற்பார்கள், மக்கள் ஏற்பது முக்கியம்.... விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு...
- நாமக்கல் அருகே என்கவுன்ட்டரில் வடமாநில கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி? ஆந்திர பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றதால் நிகழ்ந்த சம்பவம் என, சேலம் சரக டி.ஐ.ஜி. உமா விளக்கம்...
- கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கண்டெய்னரில் கடத்தப்பட்ட 67 லட்சம் ரூபாய் பறிமுதல்... கண்டெய்னரில் இருந்த சொகுசு கார்.... என்கவுன்ட்டரின்போது சிதறிய ரூபாய் நோட்டுகள் குறித்து வெப்படை போலீசார் தகவல்.....
- என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையன் ஜமாலுதீன் உடலை பார்வையிட்டு குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி ஆய்வு.. நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருந்த உடலை சக கொள்ளையன் அடையாளம் காட்டியதாகவும் தகவல்....
- "குற்றவாளிகள் போலீசாரை தாக்க முயல்வதும், போலீசார் என்கவுன்ட்டர் செய்வதும், வழக்கமாகி வருகிறது..." என்கவுன்டர் சரியான தண்டனை அல்ல என்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை...
- கேரளாவைப் போல் ஆந்திர மாநிலம் கடப்பாவிலும் ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்... ஆந்திர காவல்துறையினர், விசாரணைக்காக தமிழகம் வருகை..
- 6ஜி தொழில்நுட்ப அறிமுகத்தில் இந்தியா உலகிற்கு முன்னோடியாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உறுதி.. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 5ஜி டெஸ்ட்பெட் திட்டத்தை பார்வையிட்ட பின் பேச்சு....
- இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி... முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு...
- துபாயில் உள்ள ஆட்டோ ஸ்ரோமில் நடைபெறும், கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பு.. எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு அஜித்குமார் மேலாளர் தகவல்...