முதுநிலை நீட் உள்ளுறை பயிற்சிக்கான காலக்கெடு - உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு!

முதுநிலை நீட் உள்ளுறை பயிற்சிக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Update: 2022-04-05 12:09 GMT
முதுநிலை நீட் உள்ளுறை பயிற்சிக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. பீகாரைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவில், கொரோனா மருத்துவப் பணி காரணமாக உள்ளுறை பயிற்சியை நிறைவு செய்ய இயலாத‌தால், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திசூட் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, காலக்கெடு நீட்டிக்கப்பட்டால் நடப்பு கல்வியாண்டு பாதிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்து, தள்ளுபடி செய்த‌து.
Tags:    

மேலும் செய்திகள்