மாணவர்களுடன் ஆட்டம் போட்ட கலெக்டர்... வைரலாகும் வீடியோ

கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

Update: 2022-04-02 09:33 GMT
கேரளாவில் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர், மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பத்தனம் திட்ட மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி அறிவியல் கலை கல்லூரியில் நடைபெற்ற கலை விழாவில் மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய திவ்யா ஒரு கட்டத்தில் அவர்களுடன் இணைந்து நடனமாடினார். மாணவர்களும் ஆட்சியருக்கு ஈடு கொடுத்து நடனமாடினர். மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடி அசத்திய ஆட்சியரின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்