விரிசலடைந்த தண்டவாளத்தில் வந்த ரயில் - சிகப்பு நிற சேலையை அசைத்தபடி ஓடி வந்த மூதாட்டி

உத்தரபிரதேசம் ஏட்டா மாவட்டத்தில் உள்ள அவாகர் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-02 06:30 GMT
விரிசலடைந்த தண்டவாளத்தில் ரயில் வருவதை பார்த்த மூதாட்டி ஒருவர், திரைப்பட பாணியில் தனது சிகப்பு நிற சேலையை அசைத்தப்படி எதிர்திசையில் தண்டவாளத்தில் ஓடி வந்து ரயிலை நிறுத்தியதால், பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது.

உத்தரபிரதேசம் ஏட்டா மாவட்டத்தில் உள்ள அவாகர் பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த 58 வயதான ஓம்வதி என்ற மூதாட்டி தனது சேலையை தண்டவாளத்தின் இருபகுதியிலும் குச்சியை நட்டு ஓட்டுநருக்கு எச்சரிக்கும் விதமாக பறக்கவிட்டுள்ளார். எனினும், ரயில் வரும் சத்தத்தை கேட்ட அவர், சிகப்பு நிற சேலையை கையிலெடுத்து அசைத்தப்படி ரயில் வரும் எதிர்திசையை நோக்கி தண்டவாளத்தில் ஓடியுள்ளார். குறிப்பிட்ட தூரத்தில் சிகப்பு நிற துணியை பார்த்த ஓட்டுநர் அவசரமாக ரயிலை நிறுத்தினார். பின்னர் விரிசலடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டு, 45 நிமிட தாமத்திற்கு பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டது. மூதாட்டியின் செயலால் ரயிலில் பயணித்த 150 பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டது. துரிதமாகவும், துணிச்சலாகவும் செயல்பட்ட மூதாட்டியை பாராட்டிய ரயில்வே ஓட்டுநர் தன்னிடம் இருந்த 100 ரூபாயை பரிசாக கொடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்