அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் முதல் உயர்வு!

ஏப்ரல் ஒன்று முதல் சுமார் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை 10.7 சதவீதம் உயரத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

Update: 2022-03-27 02:35 GMT
தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் ஆண்டுதோறும் நிர்ணயம் செய்கிறது.அத்தியாவசிய மருந்துகளுக்கான தேசிய பட்டியலில் 800 மருந்துகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.

இவை பட்டியல் மருந்துகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.இந்தப் பட்டியலில் இடம் பெறாத இதர மருந்துகள் விலைகள், சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, அரசின் தலையீடு இல்லாமல் மாற்றம் செய்யப்படுகின்றன.
மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரகத்தின் தரவுகளின் அடிப்படையில், 2021இல் மொத்த விலைகள் அடிப்படையிலான விலைவாசி உயர்வு விகிதம் 10.766 சதவீதமாக உள்ளதாக தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம்தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஏப்ரல் ஒன்று முதல் பாரசிட்டமால், அசித்ரோமைசின், சிப்ரோபிளாக்சின் உள்ளிட்ட 800 அத்தியாவசிய மருந்துகள் விலைகள், 10.766 சதவீதம் அதிகரிக்க அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்