காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (30-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-09-30 00:58 GMT
  • நீலகிரி, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டித்தீர்த்த கனமழை... குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி... 
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை... வீட்டின் முன் மண் சரிந்து தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்த சோகம்...
  • தமிழகத்தின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார், உதயநிதி ஸ்டாலின்..... செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு....
  • துணை முதலமைச்சருக்கும் புதிய அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து... வாக்களித்த மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில், அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தல்... 
  • துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு... விமர்சனங்களை வரவேற்கிறேன், அதன்படி பணிகளை சிறப்பாக செய்வேன் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி...
  • தமிழ்நாட்டில் வளமையான ஒரு சிலருக்கு மட்டுமே சூரியன் பிரகாசமாக உள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சனம்.... மற்ற அனைவருக்கும் கடந்த 40 மாதங்களாக இருள் சூழ்ந்துள்ளது என்றும் காட்டம்...
  • தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருந்தாலும், அரசின் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை... தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் விமர்சனம்...
  • சட்டப்பேரவையின் அரசு தலைமைக் கொறடாவாக முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் நியமனம்...சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு...
  • கடந்த காலங்களில், திட்டமிடல், தொலைநோக்கு இல்லை... மகாராஷ்டிரா மாநிலத்தில், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி மீது விமர்சனம்... 
  • ஜம்மு - காஷ்மீரில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே... பாஜக ஆட்சியை அகற்றும் வரை உயிருடன் இருப்பேன் என சூளுரை...
  • நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் பலி....300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்....
  • கான்பூரில் நடைபெறும் இந்தியா, வங்கதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டமும் ரத்து... ஆடுகளத்தை ஆய்வுசெய்த நடுவர்கள், ஈரப்பதம் காரணமாக, 3-வது நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக அறிவிப்பு...
Tags:    

மேலும் செய்திகள்