கார் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் தீ விபத்து!

மகாராஸ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-03-20 04:29 GMT
புனே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை சூழ்ந்த‌து. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீவிபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்