பிரதமர் மோடி, அமித்ஷா காஷ்மீர் பயணம்?

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-19 16:38 GMT
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஏப்ரல் 24ஆம் தேதி ஜம்மு - காஷ்மீர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி, தொழிற்சாலை திட்டங்களை தொடக்கி வைத்து, புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துரையாட இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்