பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை ! - குஜராத்தை தொடர்ந்து கர்நாடகா அரசும் திட்டம்

குஜராத்தை போல கர்நாடகாவில் மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-19 13:41 GMT
குஜராத்தை போல கர்நாடகாவில் மாணவர்களுக்கு பகவத் கீதையை கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு அறநெறி பாடத்தின் கீழ் பகவத் கீதையை கட்டாயமாக்குவது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று பி.சி.நாகேஷ் கூறியுள்ளார். குழந்தைகளின் பாடத்திட்டத்தில் அறநெறி அறிவியலை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது என்றும் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது அறநெறி அறிவியல் வகுப்புகள் வாரம் ஒருமுறை நடத்தப்பட்டன எனவும் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து கல்வி நிபுணர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்