திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறக் கூடிய ஆர்ஜித சேவையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

Update: 2022-03-18 10:54 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறக் கூடிய ஆர்ஜித சேவையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 

அதன்படி, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஆர்ஜித சேவை டிக்கெட் வரும் 20ஆம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. Card-2 இதனை     www.tirupatibalaji.ap.gov.in என    ்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 


இதில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை மற்றும் நிஜபாதம் தரிசன  டிக்கெட்டுகள் மின்னணு குலுக்கல் மூலம் ஆன்லைனில் பக்தர்களுக்கு ஒதுக்கப்படும் எனவும்  இந்த சேவைகளுக்கான குலுக்கல் முன்பதிவு செய்ய, வரும் 20-ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஆன்லைனில் பக்தர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆன்லைன் எலக்ட்ரானிக் டிப் முறையில் தேர்தெடுக்கப்பட்டு  வரும் 22-ம் தேதிக்கு பிறகு, டிக்கெட் பெறுபவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இதைதொடர்ந்து, 2 நாட்களுக்குள் பக்தர்கள் அந்த சேவைகளுக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும் அறிவித்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்